கொரோனா பரவல் காரணமாக மும்பை ,புனேயில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த திட்டம்..?

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  வருகிற மார்ச் மாதம் கடைசி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது . இந்த சீசனில் புதிதாக லக்னோ, சூப்பர் ஜெயின்ட்ஸ் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் பங்கேற்கின்றன.

இதற்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் இரண்டு நாட்களாக  நடைபெற்றது .இதில் முக்கிய வீர்ரகள் ஏலத்தில் எடுக்கப்படாமல் ,சில வீரர்கள் அதிக விலைக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர் 
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளை இந்தியாவில் ஒரே இடத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
அதன்படி மராட்டிய மாநிலத்தில் ஐ.பி.எல் லீக் ஆட்டங்கள் நடக்கிறது. போட்டிகளை மும்பை, புனேயில் உள்ள மைதானங்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.