Cauliflower benefits in tamil: நம்மில் பெரும்பாலானோரால் தவிர்க்கப்படும் காய்கறிகள் பட்டியலில் காலிஃபிளவர்-வும் ஒன்றாக உள்ளது. ஏனென்றால், இதன் தோற்றமும், வேறு விதமான சுவையும் பலருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் இந்த அற்புத காய்கறியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அந்தவகையில், ஏகப்பட்ட நன்மைகளை தன்னகத்தே உள்ளடக்கியுள்ள காலிஃப்ளவரின் 6 முக்கிய நன்மைகளை இங்கு பார்க்கலாம்.
காலிஃபிளவரின் 5 ஆரோக்கிய நன்மைகள்
- எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
காலிஃபிளவரில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது காலிஃபிளவர்லாஜன் உற்பத்தியின் co5 ஆரோக்கிய நலன்களுக்கும், எலும்பு இழப்பைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும், இவற்றில் வைட்டமின் கே-வும் அதிகமாக உள்ளது.
- நச்சுத்தன்மையை போக்க உதவுகிறது
காலிஃபிளவர் மற்றும் பிற சிலுவை காய்கறிகளில் இண்டோல்-3-கார்பினோல் உள்ளது. இது ஒரு பைட்டோநியூட்ரியன்ட் ஆகும். இது கல்லீரலின் நச்சுச் செயல்பாடுகளில் உதவுகிறது.
- உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது
காலிஃபிளவர் சாப்பிடுவது HDL கொழுப்பின் (நல்ல வகை) அளவை அதிகரிக்கவும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
- நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது
காலிஃபிளவர் மற்றும் பிற காய்கறிகளில் காணப்படும் கோலின் என்ற சத்து, இரைப்பை குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும், குளுதாதயோன் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும், இது தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.
- புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது
சில ஆய்வுகள் காலிஃபிளவர் மற்றும் பிற சிலுவை காய்கறிகளில் உள்ள இண்டோல்-3-கார்பினோல் மற்றும் சல்ஃபோராபேன் ஆகியவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன என்றும், டிஎன்ஏ சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகின்றன மற்றும் புற்றுநோய்களை செயலிழக்கச் செய்ய உதவுகின்றன என்றும் தெரிவிக்கின்றன.
- இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்துகிறது.
காலிஃபிளவரில் வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் ஃபைபர் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்களில் அதிகமாக இருக்கின்றன. இவற்றில் கலோரிகளில் குறைவாக உள்ளது.
நடுத்தர அளவிலான காலிஃபிளவரில் 12 கிராம் உணவு நார்ச்சத்து உள்ளது. இந்த நார்ச்சத்து நமது செரிமான அமைப்பை இயக்குகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“