மத்தியப் பிரதேசத்தில் செங்கல் சூளை வியாபாரிக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வைரம் கிடைத்துள்ளது.
வாழ்க்கையில் அதிசயம் அற்புதம் எல்லாம் எல்லாருக்கும் தினமும் நடக்குமா என்ன? ஆனால் அந்த எதிர்பார்ப்பு நம் அனைவருக்குமே இருக்கத்தான் செய்கிறது. அப்படி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த செங்கல் சூளை வியாபாரி ஒருவருக்கு ஓவர் நைட்டில் கிக்கான லக் அடித்திருக்கிறது.
ஆம். மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த சாதாரண செங்கல் சூளை வியாபாரி சுஷில் சுக்லா ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகிவிட்டார். கிட்டத்தட்ட 20 வருடமாக செங்கல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது சுக்லாவின் குடும்பம். கிஷோர்கன்ச் பகுதியில் வசித்துவரும் சிறு வியாபாரியான சுக்லா, கிருஷ்ண கல்யாண்பூர் அருகே ஆழமற்ற சுரங்கத்தை தோண்டும் பணியில் ஈடுபட்ட போது, அவருக்கு 26.11 காரட் மதிப்புள்ள வைரம் கிடைத்துள்ளது. இதன் மதிப்பு ஒரு கோடிக்கும்மேல் எனத் தெரிய வந்துள்ளது. இதில் அரசுக்கான ராயல்டி மற்றும் வரி போக, எஞ்சிய தொகையாக கிட்டத்தட்ட ரூ.1.20 கோடி சுஷில் சுக்லாவுக்கு கிடைக்கவுள்ளது.
பன்னா மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது புதிதல்ல. கடந்த ஆண்டு 7 விலையுயர்ந்த வைரக்கற்கள் இதே மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM