புதுடில்லி: ரஷ்யா தாக்குதலை துவங்கிய நிலையில், உக்ரைன் வான்வெளி மூடப்பட்டது. இதனையடுத்து, அங்குள்ள இந்தியர்களை மீட்க சென்ற ஏர் இந்தியா விமானம் டில்லி திரும்பியது.
உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் நமது நாட்டவர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் மீட்டு வரப்படுகின்றனர். டாடா நிறுவனம் வாங்கிய ஏர் இந்தியா மூலம், கோவிட் காலகட்டத்தில் வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்கள் அழைத்து வர ‘வந்தே பாரத்’ திட்டம் மூலம் அழைத்து வரப்பட்டனர். தற்போது, உக்ரைனில் இருந்தும் இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில், ரஷ்யா தாக்குதலை துவங்கியது. இதனையடுத்து வான்வெளியை மூடப்படுவதாக, உக்ரைன் நோக்கி சென்ற விமானங்களுக்கு அவசர செய்தி அனுப்பப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற ஏர் இந்தியா விமானங்கள் டில்லிக்கு திரும்பின.
182 இந்தியர்கள் நாடு திரும்பினர்
முன்னதாக, ரஷ்யா தாக்குதலை துவக்கிய நிலையில், அதற்கு முன்னதாக உக்ரைனில் இருந்து கிளம்பிய அந்நாட்டு விமானம் 182 இந்தியர்களுடன் டில்லி வந்தடைந்தது.
இது தொடர்பாக உக்ரைன் சர்வதேச விமானத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், எங்கள் விமானம் ஒன்று, கீவ் நகரில் இருந்து கிளம்பி, காலை 7:45 மணியளவில் 182 இந்தியர்களுடன் டில்லியில் தரையிறங்கியது. இதில் பயணித்தவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள். இது எங்களது முதல் முயற்சி வெற்றிகரமாக முடிந்தது என தெரிவித்தார்.
Advertisement