இந்தியாவில் வாக்கிங் சென்ற ஒருவருக்கு எதிர்பாராதவிதமாக 26.11 கேரட் வைரம் கிடைத்ததையடுத்து ஒரே நாளில் மிகப்பெரிய கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா கல்யாண்பூர் பகுதியில் வசித்து வருபவர் சுஷீல் ஷுக்லா. இவர் செங்கல் சூலை வியாபாரம் செய்து வரும் நிலையில் கடந்த திங்கட்கிழமை தனது நண்பர்களுடன் வாக்கிங் சென்றுள்ளார்.
அவர் வாக்கிங் சென்று கொண்டிருந்த வழியில் சுரங்கம் ஒன்று தென்பட்டுள்ளதையடுத்து சுரங்கத்தின் உள்ளே எதோ மின்னுவது போல இருந்திருக்கிறது. அப்போது அதை கையில் எடுத்து பார்த்த போது வைர கல் போன்று மின்னியுள்ளது.
ஷுக்லா கண்டுபிடித்த வைரம் 26.11 கேரட் இருப்பதாகவும் ஏலத்தில் இந்த வைரம் 1.20 கோடி வரையில் விலைபோகும் என்று கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து சுஷீல் ஷுக்லா கூறியதாவது, எங்களது குடும்பம் 20 வருடங்களாக வைர தேடலில் ஈடுபட்டு வருகிறது.
எங்களுக்கு கிடைத்த கற்களில் இதுதான் மிக பெரியது. இந்த வைர கல்லை ஏலம் விடுவதன் மூலமாக கிடைக்கும் பணத்தை கொண்டு புதிய தொழில் ஒன்று துவங்க போவதாக அவர் தெரிவித்துள்ளார்.