நியூயார்க்
நேரடியாக உக்ரைனுக்கு நேட்டோ படைகளை அனுப்ப முடியாது என அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகெங்கும் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்ய போர் விமானங்களின் குண்டு வீச்சு தாக்குதலால் விமான நிலையங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளன. இதனால் உக்ரைன் நாட்டில் விமான போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதையொட்டி நேட்டோ அமைப்பின் பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க், “ரஷ்யா உக்ரைன்மீது போர் தொடுத்துள்ளதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இது ஐரோப்பியக் கண்டத்தில் அமைதியைச் சீர் குலைத்து விட்டது. ரஷ்யப்படைகள் உடனடியாக உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும் எனக் கேட்டு கொள்கிறோம்.
தற்போது வரை உக்ரைன் நாட்டுக்குள் நேட்டோ படைகளை அனுப்பும் எண்ணம் இல்லை. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இடம் பெறவில்லை என்பதால் நேரடியாக உக்ரைனுக்குப் படைகளை அனுப்ப முடியாது. இது குறித்து நாளை நேட்டோ தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளோம். ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்” என அறிவித்துள்ளார்.