உக்ரைனின் இரு நகரங்களை ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஏவுகணை, ராணுவ டாங்கி, போர் விமானங்கள் மூலம் உக்ரைன் நாடு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும், உக்ரைன் நகரங்கள் மீது பாராசூட் மூலம் நூற்றுக்கணக்கான வீரர்களை ரஷ்யா களமிறக்கி உள்ளது.
உக்ரைனின் தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷியா படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். உக்ரைனின் மேலும் இரு பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் ரஷ்ய படை தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்ய வீரர்களின் தாக்குதலில் உக்ரைன் நாட்டு வீரர்கள் 100 பேர் பலியாகி உள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சற்று முன்பு உக்ரேன் நாட்டு வீரர்கள் ராணுவ வீரர்கள் தாக்குதலில் ரஷ்யாவின் 50 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தற்போது தகவல் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் தாக்குதல் தாக்குதலை முறியடித்து அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் போது, ரஷ்யாவின் 50 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தற்போது தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், ஏற்கனவே ஐந்து ரஷ்ய நாட்டின் ராணுவ விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு ரஷ்ய நாட்டின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.