பிட்காயின் முதலீட்டாளர்கள் கதறல்.. சிறிய முதலீட்டாளர்களுக்கு அதீத நஷ்டம்..!

ரஷ்ய படைகள் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள காரணத்தால் முதலீட்டு சந்தை மொத்தமும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இந்தப் பாதிப்பு கிரிப்டோ சந்தையையும் விட்டுவைக்கவில்லை.

ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

ரஷ்ய அதிபர் உக்ரைன் மீதான போர் அறிவிப்பை வெளியிட்ட உடனே முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை தங்கம் மீது திருப்பிய காரணத்தால் பங்குச்சந்தை, கிரிப்டோ சந்தை அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.

 கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி

அமெரிக்காவின் பணவீக்கம், வேலைவாய்ப்புத் தரவுகள் வெளியாகும் போது ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்புகள் அனைத்தையும் கிரிப்டோ சந்தை சமாளித்து உயர்வுடன் இருந்த நிலையில், ரஷ்யா -உக்ரைன் போர் எதிரொலியில் கிரிப்டோகரன்சி கோட்டை தகர்ந்துள்ளது.

 பிட்காயின்

பிட்காயின்

இன்றைய வர்த்தகத்தில் கிரிப்டோகரன்சி சந்தையின் முக்கிய நாணயமாக விளங்கும் பிட்காயின் 7 சதவீதம் வரையில் சரிந்து 35,511.23 டாலராக உள்ளது. கடந்த 3 மாதத்தில் பிட்காயின் மதிப்பு சுமார் 39.39 சதவீதம் சரிந்துள்ளது. இன்று பிட்காயின் மதிப்பு 34,000 டாலர் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

 கிரிப்டோகரன்சி
 

கிரிப்டோகரன்சி

பிட்காயினைப் போல் எதிரியம் 12.11 சதவீதமும், டெதர் 0.2 சதவீதமும், பினான்ஸ் 10.87 சதவீதமும், USD காயின் 0.06 சதவீதமும், ரிப்பிள் 11.87 சதவீதமும், சோலானோ 8 சதவீதமும், கார்டானோ 15.70 சதவீதமும், டோஜ்காயின் 15.23 சதவீதமும், ஷிபா இனு 13.95 சதவீதமும் சரிந்துள்ளது.

 சிறு முதலீட்டாளர்கள்

சிறு முதலீட்டாளர்கள்

சந்தை மதிப்பின் படி டாப் 15 இடத்தில் இருக்கும் கிரிப்டோகாயின் அனைத்தும் இன்று சரிவில் உள்ளது. இன்றைய சரிவின் மூலம் பெரும் முதலீட்டாளர்களைக் காட்டிலும் சிறு முதலீட்டாளர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Bitcoin and top 15 cryptocurrency price falls today; After Russia attacks Ukraine

Bitcoin and top 15 cryptocurrency price falls today; After Russia attacks Ukraine பிட்காயின் முதலீட்டாளர்கள் கதறல்.. தொடர் சரிவால் சிறிய முதலீட்டாளர்கள் அதீத நஷ்டம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.