உலக அளவில் மதிப்புமிக்க தலைவர் என்ற ரீதியில் இந்திய பிரதமர் மோடி என்பதால் அவரது பேச்சை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கேட்பார் என இந்தியாவிலுள்ள உக்ரைன் தூதர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்ய உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷ்ய எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன.
இந்த நிலையில், போரை தவிர்க்க ரஷ்யாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட அந்நாட்டுக்குள் ரஷ்ய வீரர்கள் நுழைந்துள்ளனர் என புட்டின் கூறியுள்ளார். உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
ரஷ்ய படை, உக்ரைனின் பலவேறு நகரங்களில் ஏவுகணைகளை ஏவிவருகின்றன.. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி சொன்னா புதின் கேட்பார் என, இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
‘எத்தனை உலகத் தலைவர்கள் சொல்வதை புதின் கேட்கக்கூடும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால், மோடியின் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. அவரது மதிப்பான குரல் காரணமாக, புதின் குறைந்தபட்சம் அதைப் பற்றி யோசிப்பார். இந்தியரிடமிருந்து நாங்கள் மிகவும் சாதகமான அணுகுமுறையை எதிர்பார்க்கிறோம் என்றும் உக்ரைன் தூதர் இகோர் பொலிகா அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் அண்டை நாடுகளில் ஒன்றான லிதுவேனியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அந்நாட்டின் ஜனாதிபதி அறிவித்துள்ளார். உக்ரைன்-ரஷியா இடையிலான போர் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவில் லிதுவேனியா ;னாதிபதி கையெழுத்திட்டுள்ளார். இது குறித்த தீர்மானம் லிதுவேனியா பாராளுமன்றத்தில் இன்று (24) நிறைவேற்றப்பட உள்ளது. இந்த அவசர நிலை மார்ச் 10 ஆம் திகதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.