நேட்டோவிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புரிந்து கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் எச்சரித்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைப் பற்றி அச்சுறுத்தும் போது, நேட்டோவும் ஒரு அணுசக்தி கூட்டணி என்பதை அவர் மறந்துவிடமல் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் Jean-Yves Le Drian எச்சரித்துள்ளார்.
முன்னதாக ரஷ்ய அதிபர் புடின், “உங்கள் வரலாற்றில் நீங்கள் சந்தித்திராத இத்தகைய விளைவுகள்” சந்திக்கநேரிடும் என கூறியிருந்தார்.
இது, உக்ரைன் மோதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதாக அச்சுறுத்துவதற்குச் சமமானதாக பார்க்கப்படுவதாக பார்க்கப்படுவதாக வெளியுறவு அமைச்சர் லீ ட்ரியன் கூறினார்.
எனவே “அட்லாண்டிக் கூட்டணி ஒரு அணுசக்தி கூட்டணி என்பதை விளாடிமிர் புடின் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் சொன்ன விடயத்திற்கு நான் இதைத் தான் பதிலாக கூறுவேன்,” Le Drian கூறினார்.