மொத்த ஐரோப்பாவுக்கும் ஆபத்து! ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது செர்னோபில்


உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையம் ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்டதாக உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்தார்.

உக்ரைன் தலைநகர் கியேவில் (Kyiv) இருந்து வடக்கே 60 மைல் தொலைவில் அமைந்துள்ள அழிக்கப்பட்ட அணு உலையான செர்னோபில்லின் முன் ரஷ்ய டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் நிற்பதை வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று பிற்பகல் ரஷ்யப் படைகள் “செர்னோபில் அணுமின் நிலையத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதாக” கூறியிருந்தார்.

1986-ஆம் ஆண்டில் நடந்த சோகம் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக எங்கள் பாதுகாவலர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து காக்க முயன்றுவருவதாக கூறினார். செர்னோபில் தாக்கப்படுவது முழு ஐரோப்பாவிற்கும் எதிரான போர்ப் பிரகடனம் என்று அவர் கூறினார்.

ஆனால், அவர் கூறிய சில மணி நேரங்களில் செர்னோபில் முற்றிலுமாக ரஷ்ய படைகளின் கைகளுக்கு சென்றது.

1986-ல் செர்னோபில் அணு உலையில் மனித தவறுகளால் நடந்த விபத்து வரலாற்றில் மிக மோசமான அணுசக்தி பேரழிவை ஏற்படுத்தியது.

அணு உலை-4 (reactor 4) விபத்துக்குள்ளான பிறகு, இன்னும் மூன்று இயக்க அலகுகள் இயக்கப்படாத நிலையில், அணுமின் நிலையம் இறுதியாக 2000-ல் மூடப்பட்டது. இப்போது, செர்னோபில் ரஷ்யாவின் கைக்குள் சென்றுள்ளதால், இது மொத்த ஐரோப்பாவுக்கும் ஆபத்தாக மாறியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.