ராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக புதின் அறிவித்திருந்த நிலையில் உக்ரைன் மீது உடனடி தாக்குதல் நடத்தப்பட்டது. தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷியா படைகள் தாக்குதல் நடத்தினர். உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதல் துவங்கியது. இதனால் உக்ரைனில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் ரஷிய போர்க்கப்பல்களை போஸ்பரஸ் மற்றும் டார்டனெல்லஸ் ஆகிய கருங்கடல் நீர்வழியாக அனுமதிக்க வேண்டாம் என்று துருக்கிக்கு உக்ரைன் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து உக்ரைன் தூதர் வாசில் போட்னர் கூறியதாவது:-
ரஷியா உக்ரைன் மீது வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் எதிரொலியால், ரஷியாவுக்கான பாஸ்பரஸ் மற்றும் டார்டனெல்லஸ் ஆகிய கருங்கடல் நீர்வழிகளை மூட வேண்டும் என்று துருக்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும், ரஷிய தரப்பில் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும். உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்..
ரஷியாவின் 5 விமானங்களை சுட்டு வீழ்த்தியது உக்ரைன் ராணுவம்