உக்ரைன் நாட்டை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ரஷ்யாவிடம் இருந்து எங்கள் நாட்டை காப்பாற்ற கோரி இந்தியா உட்பட உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று காலை உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளதையடுத்து இரு நாடுகளிடையே போர் வெடித்து வருகின்றது.
தற்போது உக்ரைன் தலைநகர் Kyiv மற்றும் கிழக்கு உக்ரைனின் Donetsk உள்ளிட்ட நகரங்களை ரஷ்ய படைகள் தாக்கத் தொடங்கியுள்ளதாகவும் உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
இதையயடுத்து அங்கு வசித்து வரும் மக்கள் உச்சகட்ட பதற்றத்தில் உள்ளனர். இந்நிலையில் தற்போது உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, தங்கள் நாட்டை ரஷ்ய தாக்குதலில் இருந்து காப்பாற்ற வேண்டும். ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். அதோடு தூதரக ரீதியில் கடும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உக்ரைன் அமைச்சர் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு உக்ரைனை பாதுகாக்க உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.