ரஷ்யா உக்ரைன் இடையே போர் தொடங்கி, உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடான பிரித்தானியா மீது ரஷ்யா அதன் அணுஆயுதங்களை பயன்படுத்தினால் லண்டனில் ஏற்படும் பேரழிவை குறித்த தகவலை அணுஆயுத வரலாற்றாளர் அலெஸ் வெல்லெர்ஸ்டீன் வெளியிட்டுள்ளார்.
ரஷ்யா உக்ரைனின் கிழக்கு எல்லை பகுதிகளை சுதந்திர நாடக அறிவித்ததை தொடர்ந்து, பலநாடுகளாலும் ரஷ்யா உக்ரைன் மீது தனது போரை துவங்கிவிட்டது என்ன குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுவரை உக்ரைன் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களும் இடையிலான சண்டையாகவே இருப்பதால் இது பனிப்போராகவே கருதப்படுகிறது.
ஆனால் இந்த போர் முழுவீச்சில் தீவிரமடைந்து இரண்டு நாட்டு ராணுவத்திற்கிடையே ஆன ஆயுதச்சண்டைகளாக மாறி, உலகநாடுகள் அனைத்தும் போரில் களமிறங்கினாள் பெரும் பேரழிவு ஏற்படுத்தும் என்ற அச்சம் மக்களிடையே பெருமளவு நிலவிவருகிறது.
இந்த நிலையில், உலகின் அணுஆயுதங்களை அதிகம் வைத்து இருக்கும் நாடுகளில் முதல் நாடக ரஷ்யா கிட்டத்தட்ட 6257 அணு ஆயுதங்களையும், அமெரிக்கா 4018 அணு ஆயுதங்களையும், பிரித்தானியா 225 அணு ஆயுதங்களையும் வைத்துள்ளது.
உலகில் உள்ள அணு ஆயுதங்களில் 1%திற்கும் குறைவான அணு ஆயுதங்களை உலக நாடுகள் பயன்படுத்தினாலே அதிக அளவிலான சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு, 2 பில்லியன் மக்கள் அணுகதிர்வீச்சுக்கு பாதிக்கப்படுவர் என அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான சர்வதேச பிரச்சாரம் தெரிவித்திருந்தது.
அந்த வகையில், போர் பதற்றம் அதிகரித்து, உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்த பிரித்தானியா மீது ரஷ்யா அதன் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை வரைபடத்துடன் கூடிய தகவல்களை அணுஆயுத வரலாற்றாளர் அலெஸ் வெல்லெர்ஸ்டீன் வெளியிட்டுள்ளார்.
மிசைல் மேப் இணையதளத்தின், துணை இணையதளமான நுக் மேப் என்ற ஒன்லைன் இணையதள கருவிமூலம் இந்த தகவலை அலெஸ் வெல்லெர்ஸ்டீன் வெளியிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், டோபோல்(topol)ss-25 என்ற அணு ஆயுதத்தை பிரித்தானிய தலைநகர் லண்டனில் ரஷ்யா பயன்படுத்தினால் சுமார் 1 மில்லியன் மக்கள் உயிரிழந்து, சுமார் 2.2 மில்லியன் மக்கள் கதிர்விச்சு காயம் அடைவர் என தெரியவந்துள்ளது.
அதையடுத்து உலகிலேயே மிக சக்தி வாய்ந்த டீஸர்(tsar) அணு ஆயுதம் லண்டன் நகர் மீது பயன்படுத்தப்பட்டால் கிட்டத்தட்ட 6 கிலோமீட்டர் தொலைவிற்கு அழிவை ஏற்படுத்தி, சுமார் 5.7 மில்லியன் மக்களின் உயிரை குடிக்கும் மற்றும் 3.4 மில்லியன் மக்கள் கதிர்விச்சு காயம் அடைவர்.
அடுத்து, இதுவரை ரஷ்யா பரிசோதித்த அணு ஆயுதங்களில் மிகவும் சக்தி வாய்ந்த 50 mega tonne tsar பிரித்தானியா மீது பயன்படுத்தினால் 2.1 மில்லியன் மக்கள் உயிரிழக்க நேரிட்டு 2.1 மில்லியன் மக்கள் கதிர்விச்சு காயமடைந்து ஊனமுற்றிருப்பார்கள் என தகவல் தெரிவித்துள்ளார்.
உலக வரலாற்றில் இதுவரை, அமெரிக்கா ஜப்பான் நாட்டின் நகரங்களான ஹிரோஷிமோ மற்றும் நாகசாகி ஆகிய இரண்டு பகுதிகளில் மட்டுமே இந்த அணுஆயுத தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் கிட்டத்தட்ட 2,26,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.