கீவ்: ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தரப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது தாக்குதலைத் துவங்கிய ரஷ்யாவுக்கு உலக நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்துள்ளன. ஆனால், ரஷ்ய தரப்போ, உக்ரைனின் ராணுவ கட்டமைப்புகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகவும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளைத் தாக்கவில்லை எனவும் தெரிவித்தது. இந்த சூழலில் லுகான்ஸ்க், கார்கிவ், செர்னிஹிவ்வில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இந்த தாக்குதலில், பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்ய ராணுவம் உக்ரைன் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருவதால், உக்ரைனை சேர்ந்த 40கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், ரஷ்யாவின் 5 போர் விமானங்களையும், ஒரு ஹெலிகாப்டரையும் உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
Advertisement