உக்ரைனில்
ரஷ்யா
தொடுத்திருக்கும் போர் உலக மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உக்ரைன்
– ரஷ்ய எல்லையில்
போர் பதற்றம்
தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை தொடங்க ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக, உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கியுள்ளன.
முன்னதாக, உக்ரைனில் உள்ள தங்களது நாட்டவர்களை அந்தந்த நாடுகள் நாடு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தன. அந்த வகையில், உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப இந்திய அரசு, வேண்டுகோள் விடுத்தது.
உக்ரைன் நாட்டிற்கு கடந்த 20ஆம் தேதி சென்ற ஏர் இந்தியாவின் முதல் சிறப்பு விமானம் சுமார் 200க்கும் மேற்பட்ட இந்தியர்களுடன் பாதுகாப்பாக நாடு திரும்பியது. தொடர்ந்து பிப்ரவரி 24 (இன்று) மற்றும் 26 ஆகிய தேதிகளில் மேலும் 2 விமானங்களை அனுப்பி அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது போர் உச்சமடைந்து வருவதால் மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர்
மோடி
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
உக்ரைனில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் அவர்களது தற்போதைய நிலை குறித்து அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.