புதுடில்லி: உக்ரைன் மீது ரஷ்யா போரை துவங்கியதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டது.
காலை 9:54 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,936 புள்ளிகள் சரிந்து 55,296 ஆக வர்த்தமாகியது. டாடா ஸ்டீல், இந்துஸ்இண்ட் பேங்க், பாரதி ஏர்டெல், டெக் மகிந்திரா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.
அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 572 புள்ளிகள் சரிந்து 16,491 ஆக வர்த்தமாகியது. அதானி போர்ட்ஸ், டாடா மோட்டர்ஸ், டாடா ஸ்டீல், யுபிஎல் மற்றும்இந்தூஸ்இண்ட் பேங்க் ஆகியவற்றின் பங்குகள் சரிவை சந்தித்தது. பங்குச்சந்தைகளில் தொடர் சரிவை சந்தித்து வருகின்றன. ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட ஆசிய பங்குச்சந்தைகளிலும் கடும் சரிவை சந்தித்துள்ளன.
தங்கம் விலை உயர்வு
இந்த போர் எதிரொலியாக, ஆபரண தங்கம் வெள்ளி விலையும் தொடர் உயர்வை சந்தித்துள்ளது. 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 864 உயர்ந்து ரூ.38,616 ஆக விற்பனையானது. சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை ரூ.108 உயர்ந்து ரூ,4,827 ஆக விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.1.90 உயர்த்து ரூ.70.60 ஆக உள்ளது.
கச்சா எண்ணெய் விலை
உக்ரைன் மீது தாக்குதல் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 101 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.
Advertisement