உக்ரைனில் ரஷிய ராணுவம் முழு அளவில் தாக்குதல் நடத்தி வருவதால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். அவர்கள் பதுங்கு குழிகளுக்குள் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளில் குண்டுகளை வீசவில்லை என்று ரஷியா விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ரஷிய தரப்பில் கூறியதாவது:-
உக்ரைன் நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை. குடியிருப்பு பகுதியில் குண்டுகள் வீசப்படவில்லை. உக்ரைனில் உள்ள ராணுவ தளவாடங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ராணுவ மற்றும் விமான தளங்களை குறிவைத்து ரஷிய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்குள் புகுந்துள்ள ரஷிய ராணுவம் துல்லியமான ஆயுதங்களை கொண்டு சரமாரி தாக்குதல்களை தொடுத்து வருகிறது. இதனால் உக்ரைன் நாடு முழுவதும் பெரும் பதட்டம் நிலவுகிறது.
ரஷிய ராணுவத்துக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் போரிட்டு வருகிறார்கள். உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள நாடுகளும் போரில் குதிக்கும் சூழல் நிலவுவதால் சண்டை மேலும் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்…உக்ரைன் மீதான போருக்கு உலக நாடுகள் கண்டனம்- ஜோபைடன் அவசர ஆலோசனை