ரிலீஸ்க்கு இரண்டே நாட்கள்.. 'கங்குபாய் கத்தியவாடி' பெயரை மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை

‘கங்குபாய் கத்தியவாடி’ திரைப்படத்தின் பெயரை மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை அலியா பட் நடித்துள்ள இந்தி திரைப்படமான ‘கங்குபாய் கத்தியவாடி’, நாளை நாடு முழுவதும் வெளியாக உள்ளது. பாலியல் தொழிலாளியாக இருந்து மும்பையில் அரசியல்வாதியான கங்குபாய் கத்தியவாடியின் உண்மைச் கதையை அடிப்படையாக வைத்து, இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்தை தடை செய்யக் கோரி கங்குபாயின் மகன் உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

image

இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், படத்தின் பெயரை மாற்றுமாறு பரிந்துரைத்துள்ளது. அதற்கு தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர் தனது மனுதாரரிடம் ஆலோசனை செய்துவிட்டு கூறுவதாக தெரிவித்தார். இந்த வழக்கு இன்று (பிப்.24) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிக்க: கமர்ஷியலும் வரும்; கண்டெண்ட்டும் வரும் – ‘காம்போ காக்டெயில்’ கார்த்தியின் 15 ஆண்டுகள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.