விரைவில் பிரித்தானியாவும் ரஷ்யாவுடன் போரிடும் நிலை ஏற்படலாம் என எச்சரித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஒருவர், ரஷ்யா நேட்டோ நாடுகளுக்குள் கால் வைத்தால், நமது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் போருக்கு அழைக்கப்படலாம் என்று கூறியுள்ளார்.
நேட்டோவின் முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் Sir Richard Shirreff, ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்வதுடன் விடமாட்டார், அவர் அந்த பகுதியிலுள்ள மற்ற நாடுகளையும் கைப்பற்றப் பார்ப்பார் என்று கூறியுள்ளார்.
புடின் மீண்டும் ஒரு சோவியத் யூனியனை உருவாக்க விரும்புவதாக தெரிவித்துள்ள Sir Richard, கம்யூனிஸ்ட் காலகட்டத்தின்போது சோவியத் யூனியன் கிழக்கு ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தியதைப் போல, இப்போது ரஷ்யாவை ஆக்க அவர் விரும்புகிறார் என்கிறார்.
ஆக, ரஷ்யா, நேட்டோ நாடுகளான லாத்வியா, லிதுவேனியா மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளையும் ஊடுருவ முயலலாம் என்று கூறும் Sir Richard, அப்படி அவர் நேட்டோ நாடுகளுக்குள் கால் வைத்தால் நாமும் போரில் இறங்கவேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.
நேட்டோ ஒப்பந்தத்தின் பிரிவு 5, நேட்டோ நாடுகளின் ஒன்றின்மீது நடத்தப்படும் தாக்குதல், அனைத்து நாடுகள் மீதும் நடத்தப்படும் தாக்குதல் என்கிறது. ஆகவேதான் நாமும் தயாராக இருக்கவேண்டும் என்கிறேன் என்கிறார் அவர்.
புடின் நேட்டோ நாடுகளுக்குள் நுழைந்து மூன்றாம் நாடுகளுடன் போரைத் துவக்க வாய்ப்புள்ளது என்று கூறும் Sir Richard, ஆனாலும், பிரித்தானியாவோ, நேட்டோ அமைப்போ உக்ரைனில் போர் வீரர்களை இறக்கமுடியாது, காரணம், அது மூன்றாம் உலகப்போருக்கு காரணமாகிவிடலாம் என்றும் எச்சரிக்கிறார்.