சென்னை:
தி.மு.க. உறுப்பினரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரிய ஜெயக்குமாரின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.
இதனிடையே, ராயபுரத்தில் தேர்தல் விதிகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக ஜெயக்குமார் மீது 2-வதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஜாமின் கோரி ஜெயக்குமார் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இன்று இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கைது விவகாரம் தொடர்பாக அவரது மனைவி மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.