இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று காலை தொடக்கத்திலேயே பலத்த சரிவில் தொடங்கின. இதனையடுத்து முடிவிலும் பலத்த சரிவில் தான் முடிவடைந்தன.
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதலை ஆரம்பித்த நிலையில், தாக்குதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றது.
ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?
உக்ரைன் ரஷ்யாவின் ஏழு விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறுகின்றது. ஆனால் ரஷ்யாவோ அப்படி ஏதும் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.இதற்கிடையில் இவ்விரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
தொடக்கம் எப்படி?
இன்று காலை தொடக்கத்திலேய் சந்தைகள் பலத்த வீழ்ச்சியில் தான் தொடங்கின. குறிப்பாக தொடக்கத்தில் சென்செக்ஸ் 1426.28 புள்ளிகள் குறைந்து, 55,805.78 புள்ளிகளாகவும், நிஃப்டி 407.80 புள்ளிகள் குறைந்து, 16,655.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.இதில் 270 பங்குகள் ஏற்றத்திலும், 1853 பங்குகள் சரிவிலும், 79 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
முடிவு எப்படி?
தொடக்கத்தில் மட்டும் அல்ல, இந்திய சந்தைகள் முடிவில் பெரும் வீழ்ச்சியினை கண்டுள்ளன. குறிப்பாக சென்செக்ஸ் 2702.15 புள்ளிகள் அல்லது 4.72% குறைந்து, 54,529.91 புள்ளிகளாகவும், நிஃப்டி 815.3 புள்ளிகள் அல்லது 4.78% குறைந்து, 16,247.95 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதில் 240 பங்குகள் ஏற்றத்திலும்,3084 பங்குகள் சரிவிலும், 69 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் பலத்த சரிவிலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக நிஃப்டி பிஎஸ்இ, பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ ஸ்மால் கேப், பேங்க் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் 5% மேலாக சரிவில் முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி ஆட்டோ 6% மேலாக சரிவிலும், மற்ற அனைத்து குறியீடுகள் 5% கீழாக மேலாக சரிவிலும் உள்ளிட்ட குறியீடுகள் காணப்படுகின்றன.
நிஃப்டி & சென்செக்ஸ் குறியீடு
இந்த பலமான வீழ்ச்சிக்கு மத்தியில் நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், யுபிஎல், இந்தஸ் இந்த் வங்கி, கிரசிம், ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸ் இந்த் வங்கி,எம் & எம், பஜாஜ் பைனான்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
7வது நாளாக சரிவு
தொடர்ச்சியாக 7வது நாளாக சரிவில் இருந்து வரும் சந்தையானது, இன்றும் பலத்த சரிவினைக் கண்டுள்ளது. இன்று ஒரே நாளில் 10 லட்சம் கோடி ரூபாயினை முதலீட்டாளர்கள் இழப்பினைக் கண்டுள்ளனர். இது பங்கு பங்கு சந்தை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு சரிவில் காணப்படுகின்றது. சென்செக்ஸ் வரலாற்றில் 4வது முறையாக மோசமான சரிவினைக் கண்டுள்ளது.
Closing bell: sensex crashed 2700 points on russia ukraine crisis
Closing bell: sensex crashed 2700 points on russia ukraine crisis/2700 புள்ளிகள் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்.. இரத்தகளறியான சந்தை.. முதலீட்டாளர்கள் கண்ணீர்!