60 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 8 இலட்சம் பேர் இதுவரையிலும் பூஸ்டர் தடுப்பூசியைப் பெறவில்லை என்று சுகாதாரப் பிரிவு தெரிவிக்கின்றது.
அத்துடன், தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிக்கலான நிலையில் இருப்பதாக தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சமித்த கினிகே தெரிவித்தார்.
மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நேற்று (22) 1,254 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், நேற்றைய தினம் (22) 31 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.