ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கியது தொடர்பாக நேட்டோ அமைப்பு ஆலோசித்து வருகிறது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ என்ற வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு, துருப்புகளை ரஷ்யா எல்லை நோக்கி நகர்த்தியிருக்கிறது. சில உறுப்பு நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவியை வழங்கியிருக்கின்றன.
இந்த நிலையில் உக்ரைனின் தற்போதைய அவசரத் தேவை என்ன? தெரிந்துக் கொள்வோம்.
வியாழன் அன்று (பிப்ரவரி 24) ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக அறிவித்ததை அடுத்து, உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்யப் படைகள் ஏவுகணைகளை வீசியதாக பல தகவல்கள் வெளிவந்தன.
மேலும் படிக்க | அகண்ட ரஷ்யாவை ஏற்படுத்துவதற்கான புடினின் திட்டம்
ரஷ்யா தனது கடற்கரையில் துருப்புக்களை தரையிறக்கியுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கிழக்கு உக்ரைனில் உள்ள மரியுபோல் பகுதியில் பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக ஏஎஃப்பி தெரிவித்துள்ளது. CNN நிருபர் ஒருவர் கார்கிவில் இருந்து வெடிப்புச் சத்தங்களைக் கேட்டதாகவும், கியேவ் அருகே வெடிப்புகள் ஏவுகணைத் தாக்குதல்கள் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், உக்ரைன் இந்த மோதலில் வெற்றி பெறும் என்று நம்பிக்கைத் தெரிவித்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, நாட்டில் ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார்.
இதற்கிடையில், உக்ரைனின் தற்போதைய தேவைக்கு உலகம் எவ்வாறு உதவ முடியும் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறினார்.
“உலகம் உடனடியாக செயல்பட வேண்டும். ஐரோப்பா மற்றும் உலகத்தின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது” என்று ஒரு ட்வீட்டில் தெரிவித்த குலேபா, அதற்காக ஒரு பட்டியலையும் வெளியிட்டார்.
மேலும் படிக்க | Russia Ukraine Crisis: ‘சிறப்பு நடவடிக்கை’ எடுக்கப்படுவதாக புடின் அறிவிப்பு
அந்தப் பட்டியல் இதுதான்:
1. ரஷ்யா மீது SWIFT உட்பட பேரழிவு தரும் பொருளாதாரத் தடைகள்
2. ரஷ்யாவை எல்லா வகையிலும், எல்லா வடிவங்களிலும் முழுமையாக தனிமைப்படுத்துவது
3. உக்ரைனுக்கான ஆயுதங்கள், உபகரணங்கள்
4. நிதி உதவி
5. மனிதாபிமான உதவி
(பொறுப்புத் துறப்பு: உக்ரைன்-ரஷ்யா மோதலில் பல்வேறு செய்திகள் வெளிவருகின்றன. இந்த நூற்றாண்டின் முக்கியமான இந்த சர்வதேச செய்திகள் தொடர்பான செய்தியைத் துல்லியமாக வழங்க ஜீ மீடியா மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறது. இருப்பினும், அனைத்து அறிக்கைகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் நம்பகத்தன்மையை சுயாதீனமாகச் சரிபார்ப்பது கடினமானது)
மேலும் படிக்க | Russia Ukraine Crisis: அதிகரிக்கும் பதட்டத்தால் நிலைதடுமாறும் உலக சந்தைகள்