கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தொட்டது!
ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது அந்நாட்டு படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி உள்ளது. இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியுள்ளது. தொடர்ந்து தாக்குதல் தொடரும் பட்சத்தில், கச்சா எண்ணெய் விலை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
உக்ரைன் தலைநகரை தாக்க தொடங்கியது ரஷ்ய படைகள்
ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது அந்நாட்டு படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்கு வருவதாக கூறப்படுகிறது.
கோரிக்கை வைத்த ஐநா… நிராகரித்த புதின்!
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இருந்த உலக நாடுகளின் அச்சம்… ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்குமா என்பதற்கு இன்று பதில் கிடைத்து இருக்கிறது. போரை தொடங்குவதற்கான உத்தரவை ரஷ்ய அதிபர் புதின் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பிரபல செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பி செய்ளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்க புதின் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆயுதங்களை கீழே போடுமாறு உக்ரைனை ரஷ்யா கடுமையாக எச்சரித்துள்ளது.
முன்னதாக இன்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை உக்ரைன் விவகாரம் தொடர்பாக நடத்தியது.
அதில் பேசிய ஐ.நா பொது செயலாளர் ஆன்டோனியோ, “உங்கள் படை உக்ரைனை தாக்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்” என ரஷ்ய அதிபர் புதினை கேட்டுக்கொண்டார்.