எரிமலைகள் சூழ்ந்த நாடு என்பதால் இந்தோனேசியாவுக்கு எப்போதும் நிலநடுக்க அபாயம் உண்டு. இந்தியா போன்ற நாடுகளுக்கு பருவமழை எப்படியோ அதுபோன்ற இந்தோஷியாவில் எரிமலைகள் குமுறுவதும், நிலநடுக்கமும்.
அந்த நாட்டு மக்களுக்கு
நிலநடுக்கம்
பழக்கப்பட்டதுதான் என்றாலும், அவர்களை அதிர்ச்சி அடைய செய்யும்படியாக இன்று அதிகாலை அங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் பக்கிடிங்கி பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருப்பதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
உக்கிரமடையும் உக்ரைன் போர் – பொது மக்கள் உட்பட 137 பேர் பலி!
நிலநடுக்கம் காரணமாக, பக்கிடிங்கி அருகில் உள்ள கிசார் தீவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள், கட்டடங்கள் குலுங்கின.
அப்போது வீடுகளில் உறங்கி கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியுடன் விழித்து, உயிர் பயத்தில் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம், பொருட்சேதம் குறித்து உடனடி தகவல்கள் எதுவுமில்லை.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 400 க்கும் மேற்பட்ட எரிமலைகளை கொண்ட பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.