'அரபிக்குத்து' பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஜோனிதா காந்தி
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சமீபத்தில் பீஸ்ட் படத்தில் அனிருத் இசையில் வெளியான அரபிக் குத்து பாடல் 90 மில்லியன் வியூஸ்களை தாண்டி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சமந்தா, அனிருத், யாஷிகா , ஜெய் , அம்ரிதா போன்ற பல பிரபலங்கள் அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடி ரிலீஸ் வீடியோ வெளியிட்டனர். இந்நிலையில் இந்த பாடலை பாடிய ஜோனிதா காந்தி, அரபிக்குத்து பாடலுக்கு நடமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.