உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலானின் சொத்து மதிப்பு 233 பில்லியன் டாலர்களுக்கு மேல் இருக்கும். அடிக்கடி தலைப்பு செய்திகளில் அடிபடும் இவரின் பெயர் இப்போது உச்சரிக்கப்படுவதற்கு காரணம் இவரின் புதிய கேர்ள் ப்ரண்ட், ஆஸ்திரேலிய நடிகை நடாஷா பெஸட். எலான் செப்டம்பர் 2021-ல் பாடகி கீரிம்ஸ் உடனான உறவில் இருந்து விலகினார். இருவருக்கும் X AE A-Xii என்கிற ஒரு வயது மகன் உள்ளார். 50 வயதான எலான் இதுவரை பல முறை திருமணம் செய்தும் பிறகு அதிலிருந்து விலகியும் உள்ளார். இவருக்கு இதுவரை மூன்று உறவுகளில் ஆறு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த நடாஷா பெஸட்?
27 வயதான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடிகை, திரைக்கதை எழுத்தாளர், நடாஷா பெஸட். 14 வயதிலிருந்து நடிக்க ஆரம்பித்தவர், ரோமியோ-ஜூலியட் நாடகங்களில் ஜூலியட் ஆக நடித்துள்ளார். 19 வயதில் படிப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்ற நடாஷா, 2017இல் வெளிவந்த Britney Spears என்கிற படத்தில் நடித்ததன் வழியாக பிரபலமானார். மலையேற்றம், ஊர் சுற்றுவது, புத்தகங்கள் வாசிப்பது இவருக்கு பிடித்தமான விஷயங்கள். சமூக ஊடகத்தில் ஆக்டிவாக இருப்பார் நடாஷா. மறைந்த பாடகர் எல்விஸ் ப்ரெஸ்லி பயோ பிக்கில் பாடகரின் முதல் காதலியாக நடிக்க உள்ளார்.
எலானும் நடாஷாவும் சில மாதங்களாக டேட் செய்து வருகிறார்கள். சமீபத்தில் இருவரும் எலானின் தனி ஜெட்டில் இருந்து இறங்கி செல்லும் புகைப்படங்கள் வெளியாகின. நடாஷாவைப் பொறுத்தவரை எலானின் அறிவு தான் தன்னைக் காதலிக்க வைத்ததாகவும் ‘அவரின் பேங்க் பேலன்ஸ் இல்லை’ என்பதாக ஆங்கில நாளிதழ் தெரிவிக்கிறது. தாங்கள் உறவில் இருக்கும் செய்தியை இருவரும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.