த. வளவன்
சைபர்-செக்யூரிட்டி எனப்படும் இணைய பாதுகாப்பை உறுதி செய்யும் சர்வதேச அமெரிக்க நிறுவனமான கபால்யா இந்தியாவில் கால் பதித்து உள்ளது. இந்தியர் ஒருவர் அமெரிக்காவில் நிறுவிய கபால்யா தற்போது தனது அலுவலகத்தை இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நகரான பெங்களூருவில் நிறுவியுள்ளது. 2015ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் பெர்கெலி, கலிபோர்னியா, ஹோனோலுலு, ஹவாய் நகரங்களில் தனது அலுவலகங்களை நடத்திக் கொண்டிருக்கும். கபால்யா கடந்த பிப்ரவரி ஏழாம் தேதி தனது தொடக்க நிகழ்வாக ஒரு முக்கியமான முதலீட்டாளர் கூட்டத்தின் மூலம் தன்னை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. “சைபர்-செக்யூரிட்டி ஸ்டார்ட்அப் கபால்யா இன்க் ” ( cyber- security Startup Kapalya Inc.) எந்த பெயரில் இந்தியாவில் நுழைந்திருக்கும் கபால்யா அதன் முறையான நுழைவை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவிற்கு அச்சுறுத்தல்
ரஷ்யா மற்றும் சீனாவைச் சேர்ந்த இணைய தகவல் திருடர்கள் மூலம் பெறப்பட்ட பணியாளர்கள் பதிவு முதல் ராணுவ ரகசியங்கள் வரையிலான திருட்டுகள் அமெரிக்க உளவுப் பிரிவின் ரகசிய நடவடிக்கைகளை அம்பலப்படுத்தின. சில அண்டை நாடுகளுடன் இந்தியாவின் உறவுகள் கூட இந்த இணைய திருட்டால் பாதிக்கப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில் சைபர் பாதுகாப்பு அத்துமீறல்கள் அதிகரித்து வருகிறது, 2021 ஆம் ஆண்டில் 11.5 லட்சம் இணையத் தாக்குதல் சம்பவங்கள் இந்தியாவின் கணினி அவசர நிலை பதிலளிப்பு குழுவின் (CERT) கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதாக தி வீக் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியாவின் பிரத்யேகமான கணினி தகவல்கள் திருடப்பட்டு உலகம் முழுவதும் உள்ள 4.5 மில்லியன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் பணப் பரிமாற்ற தகவல்களைக் கூட இணையவழி திருடர்கள் பயன்படுத்திக் கொண்டனர். தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஏர்டெல் லிமிடெட் மற்றும் ஆன்லைன் மளிகை கடை பிக்பாஸ்கெட் ஆகியவை கூட அவர்களின் இலக்குகளாக இருந்தன. பங்கு மார்க்கெட்டில் பணப் பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் மணி கண்ட்ரோல்.காம் இணையதளத்தின் மூலம் இவை குறித்து தெரிய வந்தன. ACNBC-TV18.com வெப்சைட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, சுமார் 27% இந்திய நிறுவனங்கள் ஆண்டுதோறும் இணைய தகவல்களை திருடும் குற்றவாளிகளுக்கு சராசரியாக $5,00,000 மீட்பு தொகையாக செலுத்தியுள்ளன.
அமெரிக்க உளவுத்துறையின் (NSA) கூட்டு ஒப்பந்தம்
பணயத்தொகை கேட்டு மிரட்டி அது கிடைக்கும் வரை அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கும் நிலையையே ” ரான்சம்வேர்” (ransomware) என அழைக்கின்றனர். இதற்கு எதிராக உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களையும், நிறுவனங்களையும் தனிப்பட்ட தகவல்கள் அடிப்படையில் பாதுகாப்பது கபால்யாவின் நோக்கம். அதன் கேம்-சேஞ்சர் சொலூஷன் எனப்படும் Advanced Ransomware Countermeasures (ARC) என்பது காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்துடன் (NSA) இணைந்து செயல்படுகிறது. பணயத்தொகை கேட்டு மிரட்டும் இணையதள திருடர்களுக்கு எதிராக எடுக்கப்படும் இந்த எதிர் நடவடிக்கைகளுக்காக அமெரிக்க அரசாங்கத்தின் முன்னணி டிஜிட்டல் கண்காணிப்பு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ள ஒரே நிறுவனம் கபால்யா மட்டுமே.
தேசிய அறிவியல் அறக்கட்டளை ( NSF ) மானியம்
ஒரு நல்ல தீர்வை உருவாக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) மற்றும் ஹவாய் மாநிலம் போன்றவை கபால்யாவுக்கு மானியங்கள் வழங்குகின்றன. NSF மானியமானது கபால்யாவிற்கு அதன் தயாரிப்புகளை நேரடியாக மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுக்கு விற்பனை செய்வதை ஊக்குவிக்கிறது. இதனால் விருப்பத்துக்கு நினைத்த விலையில் விற்பனை செய்யும் தொழில் நுட்பம் போலல்லாமல் ஹவாய் மாநில மானியத்தையும் பெற்று மாநில அரசாங்கத் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு சரியான விலையில் விற்பனை செய்யும் நிறுவனமாக உள்ளது.
புதிய போர்க்களம்
ஒரு நிறுவனத்தின் நடவடிக்கைகளை முடக்கும் ரான்சம்வேர் தாக்குதல்கள் கடந்த 2021 ஆண்டு முதல் 148% வரை அதிகரித்துள்ளன. இணையத் திருடர்கள் பலர் அரசு நிதியுதவி பெறும் முக்கிய துறைகளை தமது இலக்காகக் கொண்டுள்ளனர். நீர் ஆதார நிறுவனங்கள், உணவு, நிதிச் சேவைகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற அன்றாட தேவைகளை வழங்கும் நிறுவனங்கள் இதில் அடங்கும். இணைய தகவல் திருடர்களால் பாதிக்கப்பட்டவர் அதிக பணம் செலவழிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். ransomware ஐ அதன் கணினிகளில் நிறுவ பயனர்கள், ஒப்பந்ததாரர்கள், விற்பனையாளர்கள் அல்லது ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகள் போன்ற உள் நபர்களுக்கு லஞ்சம் கொடுப்பதன் மூலம் ஊடுருவல் நிகழ்வு நடக்கிறது.
“ஒவ்வொரு நிறுவனமும் ransomware பற்றி அக்கறை கொண்டுள்ளது. அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவத்தில், ransomware மூலம் மருத்துவமனையின் செயல்பாடுகள் முடக்கப்பட்டதால் ஏராளமான நோயாளிகள் இறந்தனர். அத்தோடு மருத்துவர்களால் உடனடியாக மருந்துகள் கூட வழங்க முடியவில்லை. இது இணையதள திருடர்களிருந்து நம்மை காப்பாற்றும் பண மீட்பு நடவடிக்கை மட்டுமல்ல பல அப்பாவி மக்களை காப்பாற்றுவதும் ஆகும். இந்திய நிறுவனங்களும் அரசாங்கங்களும் தொடர்ந்து சைபர் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக இந்திய நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு உதவுவதே எங்கள் நோக்கம்,” என்கிறார் கபால்யா நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் சுதீஷ் குமார்.
ஒரு முழுமையான தீர்வு
கபால்யாவின் விரிவான நிறுவன அளவிலான மறைமுக குறியீடுகளில் வேலை செய்யக்கூடிய என்க்ரிப்ஷன் மேனேஜ்மென்ட் பிளாட்பார்ம் (EMP) இதே சேவையை வழங்கும் அதன் போட்டியாளர்கள் போலல்லாமல், மிகவும் பாதுகாப்பான எண்ட்-டு-எண்ட் பாதுகாப்புடன் கூடிய பைல்களை வழங்குகின்றன. ransomware தாக்குதல் ஏற்பட்டால் கூட எல்லா தகவல்களையும் அப்படியே மீட்டெடுக்கலாம்.
கபால்யாவின் ஏஐ/எம்எல்-அடிப்படையில் கவுண்டர் ransomware தீர்வு என்பது அமெரிக்க அரசின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்படுகிறது, இறுதி புள்ளிகள், மொபைல், கிளவுட் சர்வர்கள், என்று அழைக்கப்படும் வேகமான சேவையங்கள், தரவுத்தளங்கள் மற்றும் நெட்வொர்க்குகள் எனப்படும் வலையகங்கள் போன்ற பலதரப்பட்ட நிலைகளில் ransomware ஐ ஆரம்ப நிலையிலேயே கபால்யா நிறுவனம் தடுத்து விடும் என்று சொல்லப்படுகிறது.