இந்தியாவின் ஆயுத இறக்குமதிக்கு முட்டுக்கட்டை.. ரஷ்யா மீது அமெரிக்கா தடை..!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இல்லை என்றாலும் அமெரிக்கா உட்பட அனைத்து மேற்கத்திய நாடுகளும் கடுமையான தடையை ரஷ்யா மீது விதித்து வருகின்றனர். இதனால் ரஷ்யாவின் அனைத்து ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கும் வேளையில் ஆயுத ஏற்றுமதியும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு ரஷ்யாவிடம் ஆர்டர் செய்துள்ள பல ஆயுதங்கள் தற்போது கிடைக்காமல் போக அதிக வாய்ப்புகள் உள்ளது. இது மட்டும் அல்லாமல் சீனா உடனான எல்லை பிரச்சனை தொடர்ந்து நீடித்து வரும் வேளையில் இந்தியாவிற்கு இது பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.

உலகையே ஆட்டிப்படைக்கும் ரஷ்யா.. மற்ற நாடுகள் அஞ்சுவது இதற்காகத் தானோ?

ஆயுதங்கள்

ஆயுதங்கள்

இந்திய அரசு ஆயுத தேவைகளைப் பல ஆண்டுகளாக ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்வதன் மூலம் பூர்த்தி செய்கிறது. இந்தியா ஏற்கனவே பல ஆயுதங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்கியிருக்கும் நிலையில் கடந்த சில வருடத்தில் ஏற்கனவே இருக்கும் ஆயுதங்களுக்கான உதிரிப்பாகங்கள் மற்றும் கூடுதல் இணைப்புகளை ஆர்டர் செய்துள்ளது.

ரஷ்யா கூட்டணி

ரஷ்யா கூட்டணி

இதுமட்டும் அல்லாமல் இந்திய பாதுகாப்புப் படையை மேம்படுத்த 3 முக்கிய ஆயுதங்களை இந்திய அரசு ரஷ்யாவிடம் ஆர்டர் செய்துள்ளது. இது மூன்றும் பாகிஸ்தான், சீன எல்லையில் நிறுவன வேண்டும் என்று திட்டமிட்டு ஆர்டர் செய்யப்பட்டவை.

4 தல்வார் கிளாஸ் ப்ரேகேட்ஸ்
 

4 தல்வார் கிளாஸ் ப்ரேகேட்ஸ்

இதில் குறிப்பாக எஸ்-400 ரக ஏர் டிபென்ஸ் சிஸ்டம், 4 தல்வார் கிளாஸ் பிரேகேட்ஸ் ஆகியவை அடக்கம். இதில் 4 தல்வார் கிளாஸ் ப்ரேகேட்ஸ் ராணுவ கப்பல் மதிப்பு மட்டும் 950 மில்லியன் டாலர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கப்பல் ரஷ்யா உடையது என்றாலும் இன்ஜின் உக்ரனை நாட்டுடையது.

உக்ரைன் டர்பைன்

உக்ரைன் டர்பைன்

கிரிமியா பிரச்சனைக்குப் பின்பு 2019ல் உக்ரைன் – இந்தியா – ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரு உக்ரைன் டர்பைன்களை இந்தியாவிற்குக் கொண்டு வந்து ரஷ்ய உதவியுடன் போர் கப்பலில் இணைக்கப்பட்டது. தற்போது மீதமுள்ள 2 கப்பல்களை ரஷ்யாவில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

எஸ்-400 ரக ஏர் டிபென்ஸ் சிஸ்டம்

எஸ்-400 ரக ஏர் டிபென்ஸ் சிஸ்டம்

இந்தியா ரஷ்யாவிடம் செய்த எஸ்-400 ரக ஏர் டிபென்ஸ் சிஸ்டம் ஆர்டரில் முதல் பகுதி இந்தியாவுக்குக் கிடைத்துவிட்டாலும், இன்னும் 4 எஸ்-400 வர வேண்டும். மேலும் இந்த ஆயுதத்திற்கான பேமெண்ட்கள் பல ஐரோப்பிய வங்கிகளில் நிலுவையில் உள்ளது.

AK 203

AK 203

இந்தியாவின் பிரமோஸ் மற்றும் ரஷ்ய நிறுவனத்தின் கூட்டணி நிறுவனம் சமீபத்தில் AK 203 ரக மெஷின் துப்பாக்கி தயாரிக்கப் பிலிப்பைன்ஸ் நாட்டிடம் இருந்து ஆர்டரை பெற்றது. தற்போது உக்ரைன் – ரஷ்யா பிரச்சனைகள் பெரிதாக வெடித்தால், இந்தத் திட்டமும் பாதிக்கப்படும்.

அமெரிக்கா - இந்தியா

அமெரிக்கா – இந்தியா

தற்போது உலக நாடுகள் ரஷ்யா மீது தடை விதித்துள்ள நிலையில் ஆயுத டெலிவரிக்கு எவ்விதமான தாமதமும் ரஷ்ய தரப்பில் இருந்து தெரிவிக்கவில்லை. ஆனால் தடை செய்யப்பட்ட நாட்டில் இருந்து ஆயுதங்களை இந்தியா வாங்குவதை எதிர்த்து அமெரிக்கா CAATSA விதிகளை மீறியதற்காக இந்தியா மீது தடை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது.

ரத்து இல்லை

ரத்து இல்லை

மேகத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் இதுவரையில் எந்தவொரு திட்டமும் முடக்கும் நிலைக்குத் தள்ளப்படவில்லை, ஏனெனில் இந்தியா – ரஷ்ய உடனான கூட்டணியைக் கைவிடத் திட்டம் இல்லை. ஆனால் பணம் செலுத்துவதில் தாமதம் மற்றும் நடைமுறை சிக்கல்களைத் தீர்க்க நேரம் எடுக்கும்.

ரூபாய்-ரூபிள் வழி

ரூபாய்-ரூபிள் வழி

இந்தியாவும் ரஷ்யாவும், அமெரிக்கச் செல்வாக்கு செலுத்தும் உலளாவிய வங்கிக் கட்டுப்பாடுகளையும் கடந்து ஆயுதங்களை வாங்க இந்த டீலுக்குப் பெரும் பகுதி தொகை ரூபாய்-ரூபிள் வழியே செய்யலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

US Sanctions on Russia could hit deliveries of S-400, AK 203 and 11356 frigates to India from Russia

US Sanctions on Russia could hit deliveries of S-400, AK 203 and 11356 frigates to India from Russia இந்தியாவின் 3 முக்கிய ஆயுத இறக்குமதிக்கு முட்டுக்கட்டை.. ரஷ்யா மீது அமெரிக்கா தடை..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.