இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்து 13 ஆயிரத்து 166 ஆக பதிவாகி உள்ளது.
24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 302 பேர் உயிரிழந்த நிலையில், 26 ஆயிரத்து 988 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் 1 புள்ளி 28 சதவீதமாக உள்ளதுடன், நாடு முழுவதும் 1 லட்சத்து 34 ஆயிரத்து 235 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.