நடிகர்
தனுஷ்
தமிழ் சினிமா நடிகர் என்பதை தாண்டி தற்போது உலக சினிமா ரசிகர்களும் அறிந்த நடிகராகிவிட்டார். துள்ளுவதோ இளமை படத்தில் பள்ளி மாணவனாக அறிமுகமான தனுஷ் இன்று ஹாலிவுட் வரை சென்று கலக்குகிறார் என்றால் அதற்கு அவரின் கடின உழைப்பு மட்டுமே காரணம்.
யார் என்ன விமர்சித்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாது தன் வேலை ஒன்றில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் தனுஷ். அதன் காரணமாகத்தான் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். நடிகர் மட்டுமல்லாது இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத்திறன் கொண்டவராக வலம் வருகிறார் தனுஷ்.
மாறன்
தற்போது வாத்தி, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வரும் தனுஷ்
வாத்தி
படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகவிருக்கிறார். இந்நிலையில் இவரது நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் படம்
மாறன்
. ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தில் மாளவிகா மோஹனன் நாயகியாக நடித்துள்ளார்.
விஜய்யின் போட்டியாளர் என்கின்ற பிம்பம் தான் அஜித்தை சினிமாவில் வாழவைக்கின்றது: விஜய் – அஜித் ரசிகர்கள் மோதல்..!
தனுஷின் கடைசி இரண்டு படங்களான
ஜகமே தந்திரம்
,
அத்ராங்கி ரே
OTT யில் வெளியான நிலையில் மாறன் படமும்
OTT
வெளியீடு என அறிவித்தது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது. முன்னணி நடிகரான தனுஷின் ரசிகர்கள் அவரை திரையில் காணவே விரும்பும் நிலையில் இவரது படங்கள் தொடர்ந்து OTT யில் வெளியாவதை அவரது ரசிகர்கள் விரும்பவில்லை.
இருப்பினும் அடுத்து வரும் தனுஷின் படங்கள் அனைத்தும் திரையிலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது மாறன் படம் மார்ச் மாதம் வெளியாகவுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் மாறன் படம் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து? எஸ் ஏ சந்திரசேகர் அறிவுரை!