உக்ரைனைக் கைப்பற்றுவதற்கு ரஷ்யாவிடம் பல காரணங்கள் இருந்தாலும், உக்ரைன் நாட்டில் உள்ள ஏராளமான வளங்கள் மிக முக்கியமான காரணமாக உள்ளது.
உக்ரைன் நாட்டில் இல்லாத வளங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வளங்கள் நிறைந்த நாடாக உக்ரைன் உள்ளது.
யுரேனியம் (Uranium): ஐரோப்பா கண்டத்தில் முதல் இடம்
டைட்டானியம் (Titanium): ஐரோப்பாவில் இரண்டாவது இடம், உலகில் 10-வது இடம்
மாங்கனீசு (Manganese): உலகளவில் 2-வது இடம்
இரும்புத் தாது (Iron Ore): உலகளவில் 2-வது இடம்
மெர்குறி (Mercury): ஐரோப்பாவில் 2வது இடம்
ஷேல் கேஸ் (Shale Gas): ஐரோப்பாவில் 2-வது இடம், உலகில் 13-வது இடம்
நிலக்கரி (Coal): ஐரோப்பாவில்ல 7-வது இடம்
இயற்கை வளங்கள்: உலகளவில் 4-வது இடம்
விவசாயம்: மொத்த விளை நிலத்தில் முதல் இடம்
கருப்பு மண் (Black Soil): உலகின் 3-வது இடம்.
உக்ரைனில் இருந்து ஏராளமான பூக்கள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உக்ரைன் நாட்டின் மூலம் சுமார் 600 மில்லியன் மக்களின் அன்றாட உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.
அம்மோனியா (Ammonia): ஐரோப்பாவில் முதல் இடம்
அணுமின் நிலையங்கள் (Nuclear Power Plant): ஐரோப்பாவில் 3-வது இடம் மற்றும் உலகளாவிய 8வது இடம்
அணு விசையாழிகள் (Nuclear Turbines): உலகளவில் 4வது பெரிய உற்பத்தி நாடு
ரொக்கெட் லாஞ்சர்கள் (Rocket Launchers): உலகளவில் 4வது இடம்
உக்ரைன் பெரும்பாலும் ரஷ்யாவைப் போலவே தன்னிறைவு பெற்ற பொருளாதாரமாகும், அதாவது யாரையும் சார்த்து இல்லாமல் இருக்கும் ஒரு நாடாகும். ஆனால் உக்ரைன் இயற்கை வளங்களில் ரஷ்யாவை விடவும் மிகப்பெரிய நாடாக விளங்குகிறது.
இந்தியா உக்ரைன் நாட்டில் இருந்து சமையல் எண்ணெய், பார்லி, கோதுமை எனப் பல பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. இதேபோல் உக்ரைன் நாட்டிற்கு இந்தியாவில் இருந்து அதிகப்படியான மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்யப்படுகிறது.