கீவ்: ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ள உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கி உள்ளது சுவீடன் அரசு
கடந்த இரண்டு தினங்களாக உக்ரைன் நாட்டு மீது ரஷ்யாதாக்குதல் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து நேட்டோ நாடுகளிடம் தங்களுக்கு உதவுமாறு உக்ரைன் கேட்டுக்கொண்டது. இருப்பினும் நேட்டோ நாடுகள் ராணுவ உதவியோ அல்லது மற்ற எந்தவகையிலான உதவியோ செய்யாமல் மவுனம் காத்து வந்தன. இதனையடுத்து உக்ரைன் அதிபர் தங்களை காத்துக்கொள்ள தங்களுக்கு வழி வகை தெரியும் எனவும் அவர்கள் வேண்டுமானால் அஞ்சலாம் ஆனால் உக்ரைன் அஞ்சாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சுவீடன் அரசு தொழில்நுட்ப உதவியும், ராணு ரீதியலான உதவியும் செய்து உள்ளது. இதனையடுத்து உக்ரைனுக்கு ராணுவ உதவி அளித்துள்ள முதல்நாடு என்ற பெயரை சுவீடன் பெற்றுள்ளது.
ஐ.நா மனிதாபிமான உதவி
இதனிடையே ரஷ்யதாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவியை செய்ய ஐ.நா முன்வந்துள்ளது என அதன் பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.இதன் ஒரு பகுதியாக 20 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உதவி செய்ய முன்வந்துள்ளதாக தெரிவத்துள்ளார்.
Advertisement