உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதற்கு ரஷ்ய அதிபர் புடின் தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது 2வது நாளாக ரஷ்ய போர் தொடுத்து வரும் நிலையில், ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து வந்தார்.
இந்நிலையில், உக்ரைன் தூதரக குழுவுடன் பேச்சுவார்த்தை நடந்த ரஷ்ய தூதரக குழுவை அனுப்ப புடின் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ரஷ்ய அரசாங்க செய்தித்தொடர்பாளர் Dmitry Pesko கூறியதாவது, ஜென்ஸ்கியின் பேச்சு வார்த்தை அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில் பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கிற்கு தூதுரக குழுவை அனுப்ப ஜனாதிபதி புடின் தயாராக உள்ளார்.
பேச்சுவார்த்தைக்காக வெளியுறவு அமைச்சகம், பாதுகாப்பு மற்றும் நிர்வாக அதிகாரிகள் உட்பட ரஷ்ய தூதரக பிரதிநிதிகள் மின்ஸ்கிற்கு அனுப்பப்படலாம் என Dmitry Pesko கூறினார்.