கீவ்: உக்ரைன் ராணுவ வீரர்களிடம் கைப்பற்றிய டாங்குகள் மூலம், தங்கள் நாட்டு வீரர்களின் சீரூடையில், கீவ் நகரை நோக்கி வேகமாக முன்னேறி வருவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் செர்னோபில் அணுஉலையை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவை எதிர்க்கும் பணியில் தனித்து விடப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். தலைநகர் கீவ் மீது ரஷ்ய படைகள் தொடர் குண்டுமழை பொழிந்து வருகின்றன. பல இடங்களில் குண்டுவெடித்த சத்தங்கள் கேட்டுள்ளது தெரியவந்துள்ளது. கீவ் மீது தாக்குதல் நடத்திய ரஷ்ய போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைன் தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது.
இந்நிலையில், தலைநகர் கீவ் நகருக்கு 5 கி.மீ., தொலைவில் உள்ள வேர்செல் நகரை ரஷ்ய படைகள் நெருங்கி உள்ளன. ரஷ்ய படைகள் தலைநகரை நெருங்குவதை தவிர்க்க பாலம் ஒன்றை உக்ரைன் வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.
உக்ரைன் அரசு கூறுகையில், தலைநகர் கீவ் நகரை வேகமாக ரஷ்ய படைகள் நெருங்கி உள்ளது. உக்ரைன் போர் வீரர்கள் சீருடையில், உக்ரைன் ராணுவத்தின் டாங்கிகளை கைப்பற்றி அதன் மூலம் வேகமாக முன்னேறுவதாக தெரிவித்துள்ளது.
கீவ் நகரின் நுழைவுவாயிலை ரஷ்ய ராணுவம் நெருங்கிவிட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, உக்ரைனின் முக்கிய நகரம் ஒன்றில் ரஷ்ய கொடி ஏற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement