ரஷ்யாவுடனான இரண்டாவது நாள் போர் உக்ரைனில் தொடங்கிய நிலையில் முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
மேலும் ரஷ்யாவைச் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதனிடையில் லிதுவேனியா நாட்டில் உக்ரைன் போருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
செல்போன் விளக்குகளை ஒளிர செய்து உக்ரைனுக்கான ஆதரவை தெரிவித்தனர்.
கிவ் நகரின் மீது தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதன் பாக சிதறல்களில் சிலவற்றை அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராக தன்னந்தனியாக போராடி வருவதாகவும், தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
முதல் நாளின் போர் தொடர்ச்சியாக ரஷ்யா இன்று உக்ரைன் மீதான 2 ஆம் நாள் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. தலைநகர் கீவில் பயங்கர சத்தத்துடன் கூடிய இரண்டு தாக்குதல்கள் வெள்ளிக்கிழமை காலை நிகழ்ந்துள்ளன.
இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி தஞ்சம் புகுகின்றனர்.