ரஷ்யா ,
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் இரு நாட்டிலும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெற இருந்த ரஷியன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தய தொடர் திட்டமிட்டபடி நடப்பது கேள்வி குறியாகியுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் தெரிவித்தபோது, உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் நடைபெறும் சூழ்நிலைகளை கூர்ந்து கவனித்து வருகிறோம். வரும் காலங்களில் நடைபெறும் நிகழ்வுகளை பொறுத்து இந்த தொடர் பற்றி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே ஜெர்மனி நாட்டை சேர்ந்த முன்னணி கார் பந்தய வீரர் செபாஸ்டின் வேட்டல் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.