உக்ரைனில் முழு வீச்சில் போரினை தொடுத்து வருகின்றது ரஷ்யா. இரண்டாவது நாளான இன்றும் சற்று சளைக்காத ரஷ்யா படைகள் வேகமாக உக்ரைனுக்கும் முன்னேறி வருகின்றன. குறிப்பாக உக்ரைனின் செர்னோபிள் அணு தளத்தினை ரஷ்ய ராணுவம் கைபற்றியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து வரும் உக்ரையில் ஏராளமான உயிரிழப்புகள் நேர்ந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பல சர்வதேச நாடுகள் ரஷ்யாவினை எச்சரித்தும் பார்த்துவிட்டன. கோரிக்கையும் வைத்து விட்டன. ஆனால் இவை எவற்றையும் ரஷ்யா செவி மடுத்ததாக தெரியவில்லை.
உக்ரைன் மீது போர்: ரஷ்ய பங்குகள் 50% சரிவு.. ரூபிள் மதிப்பு வரலாற்று சரிவு..!
பொருளாதார தடையா?
உலக நாடுகள் பலவும் ஏற்கனவே ரஷ்யாவின் மீது பொருளாதார தடையை விதித்துள்ளன. ஆனால் இதற்கெல்லாம் நாங்கள் பயப்படுவோமா? என்ற தோனியில் ரஷ்யா இருந்து வருகின்றது. ஆனால் பொருளாதார தடையால் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் மட்டும் அல்லாது அந்த நாட்டில் உள்ள அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், தனிப்பட்ட நபர்களின் பொருளாதார வளர்ச்சி என அனைத்துமே பாதிக்கப்படும்.
ரஷ்யா பிடியில் சிக்கியுள்ள நாடுகள்
ஆனால் இத்தனை பிரச்சனைக்களுக்கும் மத்தியிலும் எதற்கும் சளைக்காத ரஷ்யா, தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனை இன்னும் ஆழமாக யோசித்து பார்த்தால் அண்டை நாடுகள் பலவும் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தாலும், நேரடியாக யாரும் உதவிக்கு வரவில்லை ஏன் என்று தோன்றும். ஏனெனில் ரஷ்யாவின் பிடியில் மற்ற நாடுகள் மறைமுகமாக சிக்கியுள்ளன. எப்படி வாருங்கள் விவரமாக பார்க்கலாம்.
ரஷ்யா வசமுள்ள பல லட்சம் கோடி
ரஷ்யா – உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ளது என்ற அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே பங்கு சந்தைகள் தாறுமாறாக சரிவினைக் கண்டன. ஆனால் சுமார் 300 பில்லியன் டாலர் பணம் ரஷ்யாவின் வசம் சிக்குண்டுள்ளது யாருக்கு தெரியும். இதன் இன்றைய இந்திய மதிப்பு 20 லட்சம் கோடிகளுக்கு மேல்.
இந்த ஒரு நிதி ஆயுதம் போதும்
ஆக சர்வதேச சந்தைகளை முறியடிக்க ரஷ்யாவுக்கு இந்த ஒரு ஆயுதமே போதுமே. ஒரே நேரத்தில் ரஷ்யா இந்த நிதியினை முடக்கினாலே, வெளியோ எடுத்தாலோ? அது சர்வதேச பண சந்தையினை ஒடுக்க போதுமானதாக இருக்கும். இது குறித்து கிரெடிட் சூசி குழுமத்தின் நிபுணர் ஜோல்டன் போசார், பாங்க் ஆஃப் ரஷ்யா மற்றும் நிதி சந்தைகளில் இருந்தும் ஆய்வு செய்து இந்த தரவினை வெளியிட்டுள்ளார்.
இப்படியும் ஒரு காரணம் உண்டு
ரஷ்யாவின் மத்திய வங்கி மற்றும் தனியார் துறைகள் கிட்டதட்ட 1 டிரில்லியன் டாலர் லிக்விட் சொத்தினை வைத்துள்ளன, இந்த லிக்விட் சொத்துகள் விரைவில் எளிதாக பணமாக மாற்றக்கூடிய ஒன்று. ஆக ஏதேனும் அவசர காலம் பிரச்சனை எனும் போது, ரஷ்யா இதனை பற்றி சிந்திக்க கூடும். இந்த லிக்விட் சொத்தில் அமெரிக்க டாலர்களில் மிகப்பெரிய பங்கும் உள்ளது. ஆக ரஷ்யாவின் மீது எந்த தடையை விதிக்கும் போது அமெரிக்கா, எந்தளவுக்கு மறைமுகமாக பாதிக்கும் என்பதை நிச்சயம் அறிந்திருக்கும். இதுவும் நேரடியாக அமெரிக்கா ரஷ்யாவினை எதிர்க்காததற்கு ஒரு காரணம் எனலாம்.
இதிலும் முதலீடு
இதுமட்டும் அல்ல, 2018ல் ரஷ்யா அதன் அனைத்து கருவூல பத்திரங்களை விற்ற பின்னரும் கூட, வெளி நாட்டு வங்கிகளில் 100 பில்லியன் டாலர் டெபாசிட் தொகையும், 200 பில்லியன் டாலர் அன்னிய செலவானி பரிமாற்றத்தில் இருப்பதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. போசரின் கூற்றுப்படி, நிதி சந்தைகளில் ஒரு பெரும் மாற்றத்தினை கொண்டு வருவதற்கு ரஷ்யாவின் இந்த முதலீடுகள் போதுமானது.
ஆக மொத்தத்தில் ரஷியாவின் குடுமி பிடியில் சிக்கியுள்ள நாடுகள் எப்படி ரஷ்யாவினை நேரடியாக எதிர்க்க முடியும். கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.
Russia dominates the world. Is this what other countries are afraid of?
Russia dominates the world. Is this what other countries are afraid of?/உலகையே ஆட்டிப்படைக்கும் ரஷ்யா.. மற்ற நாடுகள் அஞ்சுவது இதற்காகத் தானோ?