புதுடெல்லி: தமிழக நகர்புற உள்ளாட்சி அமைக்களுக்கு ரூ.267 கோடி தொகையை விடுவித்து ஒன்றிய நிதி அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நேற்று முன்தினம் டெல்லி சென்ற தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகைகளை வழங்கும்படி கோரிக்கை வைத்தார். இந்நிலையில், ஒன்றிய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக நகர்புற உள்ளாட்சி அமைக்களுக்கு ரூ.267 கோடி தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.