எங்களுக்கேவா? அதிரடி நடவடிக்கை எடுத்த ரஷ்யா!

உக்ரைன்
மீதான போர் தாக்குதலை
ரஷ்யா
நேற்று தொடங்கியது. இன்று தனது இரண்டாவது நாள் தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. அந்த நாட்டின் விமானப்படை, கடற்படை, ராணுவ தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்-யை சுற்றி வளைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.

முன்னதாக, உக்ரைன் எல்லையில் போர் பதற்ற அதிகரித்த நிலையில்,
அமெரிக்கா
கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தது. கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க அதன் கூட்டனி நாடுகள் தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா அறிவித்தது. அதன்படி, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

இந்த நிலையில், தங்களுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்த மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முன்னதாக
பொருளாதாரத் தடை
விதித்திருந்த நிலையில், ரஷ்யா தற்போது தங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மீது பொருளாதாரத் தடையை விதிக்க முடிவு செய்துள்ளது.

உலக பொருளாதாரப் போர் ஆரம்பம்.. உண்மையான சண்டை இனிமேல்தான்!

மேற்கத்திய நாடுகளில் பலநாடுகள் ரஷ்யாவின் இயற்கை எரிவாயு, உணவுப் பொருட்கள் உலோகங்கள் உள்ளிட்ட பல முக்கிய பொருள்களை நம்பியே உள்ள நிலையில், ரஷ்யாவின் இந்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், இந்த விவகாரத்தில், ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.