மும்பை பங்குச்சந்தை இன்று காலை குறியீட்டு சென்செக்ஸ் 1,264 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது. இதனால் பங்குச்சந்தை 55,794 புள்ளிகளில் வர்த்தகமானது.
வர்த்தகத்தின் இடையே 55,299 புள்ளிகள் குறைந்தும், 55,984 புள்ளிகள் உயர்ந்தும் காணப்பட்டன.
இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,328.61 புள்ளிகள் அதிகரித்து 55,858.52 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 410.45 புள்ளிகள் அதிகரித்து 16,658.40 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
கோல் இந்தியா, நிஃப்டி வங்கி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்பட்டன. நெஸ்ட்லே இந்தியா, இந்துஸ்தான் லீவர், வெள்ளி, கச்சா எண்ணெய் காப்பர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்து காணப்பட்டன.
இதையும் படியுங்கள்.. சர்வதேச பளுதூக்குதல் போட்டியில் தங்கம்- காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றார் மீராபாய் சானு