தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் பிரிந்து வாழ்கிறார்கள். அவர்கள் மீண்டும் சேரப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
முன்னதாக
தனுஷ்
பற்றி இசையமைப்பாளர்
அனிருத்
மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் ஐஸ்வர்யாவிடம் போட்டுக் கொடுத்ததாக பேச்சு கிளம்பியது. இதையடுத்தே அனிருத், சிவகார்திகேயனை தனுஷ் கழற்றிவிட்டார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தான் முதல் முறையாக இயக்கியிருக்கும் காதல் பாடல் வீடியோவான முசாபிரில் தம்பி அனிருத்துக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் அக்கா ஐஸ்வர்யா.
‘அவரிடம்’ சொன்ன லதா: பெரிய பிரச்சனையில் தனுஷ்?
முசாபிர் பாடலை தமிழில் பாடியிருப்பது அனிருத். ஒரு அக்கா தன் தம்பிக்கு வாய்ப்பு கொடுப்பது சாதாரண விஷயம் தான். ஆனால் அதை பெரிய விஷயமாக சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தனுஷே அனிருத்துடன் மீண்டும் கூட்டணி சேர்ந்துவிட்டார்.
இந்நிலையில் ஐஸ்வர்யாவின் கூட்டணி பற்றி விமர்சிக்கிறார்கள். ஆனால் யார் என்ன பேசினால் எனக்கென்ன, வேலை தான் முக்கியம் என்று இருக்கிறார் ஐஸ்வர்யா.
தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பெரிய ஸ்டாரின் மகளுக்கும், மும்பையை சேர்ந்த பையனுக்கும் இடையேயான காதல் கதை தான் இந்த முசாபிர். இதை இயக்கியிருப்பதுடன், தயாரிக்கவும் செய்திருக்கிறார்.
முசாபிர் வீடியோ வேலை முடிந்துவிட்டதை புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.