செங்கல்பட்டு அருகே பாலாறு பாலத்தில் நடைபெற்று வந்த சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பாலத்தின் வழியே போக்குவரத்து தொடங்கியது.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே இருங்குன்றம் பள்ளி – மாமண்டூர் இடையே பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள பழைய பாலம் சீரமைப்புப் பணிகளுக்காக கடந்த 7 ஆம் தேதி மூடப்பட்டது. இதனால் அவ்வழியே செல்ல வேண்டிய வாகனங்கள், மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இந்நிலையில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வாகனப் போக்குவரத்துக்காக பாலம் திறந்து விடப்பட்டுள்ளது.
தற்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் செல்லும் வாகனங்கள் அவ்வழியே செல்கின்றன. இருப்பினும் திருச்சியிலிருந்து சென்னை வரும் மார்க்கத்தில் உள்ள புதிய மேம்பாலம் மூடப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையிலேயே இயக்கப்படுகின்றன. புதிய மேம்பாலம் மார்ச் 20 ஆம் தேதிக்குள் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்படும் என மாவட்ட நிர்வாகமும் தேசிய நெடுஞ்சாலை துறை இயக்குநரகமும் அறிவித்துள்ளது.
சமீபத்திய செய்தி: ரஷ்யா – உக்ரைன் போர்: டோக்யோ முதல் நியூயார்க் வரை வலுக்கும் போராட்டம் ஏன்?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM