‘ஸ்மார்ட் அக்ரிகல்ச்சர்’ என்ற தலைப்பில் வெபினார் ஆன்லைன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
நாடு முழுவதும் உள்ள சிறு விவசாயிகளுக்கு, ‘பி.எம்.கிஸான் சம்மான் நிதி’ திட்டம் மிகப்பெரிய ஆதரவாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டம் இதே நாளில் தொடங்கப்பட்டது. இதில் விவ சாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்படுகிறது. ரூ.2,000 வீதம் 3 தவணைகளாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 11 கோடி விவசாயிகளுக்குரூ.2 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 7 ஆண்டு கால பாஜகஆட்சியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வேளாண் கடன்இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க இந்த 7ஆண்டுகளில் மத்திய அரசு பலதிட்டங்களை அமல்படுத்தி உள்ளது. பழைய நடைமுறைகளை மேம்படுத்தி இருக்கிறோம். பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.-பிடிஐ