புதுடில்லி:நாடு முழுதும் ‘கிரிப்டோகரன்சி’ எனப்படும் மெய்நிகர் நாணயங்கள் வாயிலாக வர்த்தகம் செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததாக அஜய் பரத்வாஜ் என்பவர் உட்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அஜய் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மனுதாரரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை தொடரும். அமலாக்கத் துறை விசாரணைக்கு மனுதாரர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
நாடு முழுதும் 47 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 87 ஆயிரம் ‘கிரிப்டோகரன்சி’ வர்த்தகம் நடந்துள்ளதாகவும் அமலாக்கத் துறை கூறியுள்ளது. கிரிப்டோ கரன்சி வாயிலான வர்த்தகம் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து, மத்திய அரசு தன் நிலைப்பாட்டை எழுத்துப் பூர்வமாக நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Advertisement