மும்பை : ரஷ்யா – உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போரால் இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 2000 புள்ளிகளும், நிப்டி 850 புள்ளிகளும் சரிந்த நிலையில் இன்று(பிப்., 25) மீண்டன. சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு அதிகமாக வர்த்தகமாகின.
இன்றைய காலைநேர 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1544.45 புள்ளிகள் உயர்ந்து 56074-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 472 புள்ளிகள் உயர்ந்து 16,720ஆகவும் வர்த்தகமாகின. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்தது, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கி தொடங்கியது உள்ளிட்ட காரணங்களால் இன்றைய வர்த்தகம் ஏற்றம் கண்டன. மேலும் இந்திய ரூபாயின் மதிப்பும் 32 காசுகள் உயர்ந்து வர்த்தகமாகின.
தங்கம் விலையும் சரிவு
தங்கம் விலை நேற்றை விட இன்று கணிசமாக குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,801 க்கும், சவரன் ரூ.38,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ரூ.270 குறைந்து ரூ.70க்கு விற்பனையாகிறது.
Advertisement