Tamil Health Update For Diabetes Patients : இந்திய சமையல் அறையில் முக்கியமாக பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் ஒன்று ஓமம். மருத்துவ குணங்கள் நிறைந்ள்ள இந்த ஓமம், வாயுத் தொல்லையைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் இருந்து நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது வரை பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.
வாயு மற்றும் அஜீரணத்தை குணப்படுத்த நீங்கள் அரை டீஸ்பூன் ஓம விதைகளை உப்புடன் மென்று சாப்பிட்டுவிட்டு வெதுவெதுப்பான நீரை அருந்தினால் சில நிமிடங்களில் வாயுத்தொல்லை குறையும். குறிப்பாக ஓமம் நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிய நன்மைகளை வழங்குகிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஓமம் சிறந்தது
உணவுக்குப் பிறகு ஓமம் தேநீர் குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் உங்களுக்கு ஒரு டீஸ்பூன் ஓமம், ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகள் மற்றும் நான்கில் ஒரு பங்கு இலவங்கப்பட்டை தூள் தேவை. இந்த பொருட்கள் அனைத்தையும் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து தேநீர் காய்ச்சவும். நீங்கள் சாப்பிட்ட 45 நிமிடங்களுக்குப் பிறகு இதை உட்கொள்ளுங்கள். இது இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைவதாகக் கூறப்படுகிறது,”
அஜீரண பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்
அசிடிட்டி, வாயு மற்றும் வீக்கம் மட்டுமல்ல, ஓம விதைகள் வயிற்று வலியைப் போக்க உதவும். ஓம விதைகளை மென்று சாப்பிடுவது அமிலத்தன்மையை குறைக்க உதவும்.
செரிமானத்தை மேம்படுத்தும்
ஓம விதைகளை தண்ணீரில் கொதிக்க வைப்பது நமது உணவை உடைக்க அதிக செரிமான நொதிகள் மற்றும் வயிற்று அமிலங்களை சுரக்க உதவும். இதற்கு ஒரு டீஸ்பூன் ஓம விதைகளை கொதிக்கும் நீரில் சேர்ந்து அந்த நீரை குடிப்பதுசெரிமானத்திற்கு மிகவும் நல்லது. இது உங்கள் வயிற்று அமிலங்கள் மற்றும் செரிமான அமைப்பை தளர்த்தி, உங்கள் குடல் சுவர்களுக்கு மிகவும் ஆரோக்கியத்தை அளிக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு நன்மை பயக்கும்
உங்கள் பிள்ளைக்கு அடிவயிற்றில் கடுமையான வலி அல்லது குடல் அடைப்பு காரணங்களால் அவதிப்பட்டால் நீங்கள் ஓமம் தண்ணீர் அல்லது சில ஓம விதைகளை மெல்ல கொடுக்கலாம். இது உடனடி தீர்வை கொடுக்கும்.
குடற்புழு நீக்கத்தில் உதவும்
ஓமத்தை (1 டீஸ்பூன்) சிறிது வெல்லத்துடன் (1 டீஸ்பூன்) கலக்கவும். இந்த கலவையானது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை குடற்புழு நீக்கத்திற்கான ஒரு பொதுவான தீர்வாகும். வெல்லம் புழுவை வெளியே வர ஈர்க்கிறது மற்றும் ஓமம் வயிற்று அமிலத்துடன் கலந்து புழுக்களை அழிக்க உதவுகிறது.
ஆஸ்துமா உள்ளவர்களுக்கு உதவும்
ஓமம் டீயுடன் தேன் சேர்த்து பருகினால் ஆஸ்துமா அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெறலாம். இது இருமல் மற்றும் நெரிசலைக் குறைக்க உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
ஓமத்தில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.