உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க, மத்திய அரசு பலே திட்டம் ஒன்றை வைத்துள்ளது.
சோவித் யூனியன் அமைப்பில் இருந்து உக்ரைன் தனி நாடாக பிரிந்ததில் இருந்து,
ரஷ்யா
– உக்ரைன் இடையே தகராறு இருந்து வருகிறது. மேலும், எல்லைப் பிரச்னையும் இரு நாடுகளுக்கு இடையே இருந்து வருகிறது. இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, உக்ரைன் நாடு விருப்பம் தெரிவித்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ரஷ்யா, உக்ரைனை அச்சுறுத்தும் விதமாக, எல்லையில், ஒரு லட்சத்திற்கும் மேலான ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் நேற்று, யாரும் எதிர்பாராதவிதமாக, உக்ரைன் மீது ரஷ்ய படையெடுத்தது. இதனால் உக்ரைனில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. தலைநகர் கீவ் உள்ளிட்ட இடங்களில் ரஷ்யப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில், 137-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
உக்கிரமடையும் உக்ரைன் போர் – பொது மக்கள் உட்பட 137 பேர் பலி!
இந்நிலையில், உக்ரைன் தனது வான்வெளியை தடை செய்திருப்பதால், மத்திய வெளி விவகாரத் துறை அமைச்சகம் உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கு உதவுவதற்காக “நில எல்லைகளுக்கு… ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக் குடியரசு மற்றும் ருமேனியாவில்” குழுக்களை அனுப்புகிறது. உக்ரைன் தனது மேற்கு எல்லையை இந்த நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது.
அதே நேரத்தில் ரஷ்யா கிழக்குப் பக்கத்திலிருந்து தாக்குகிறது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்த நான்கு நாடுகளில் உள்ள தனது அமைச்சர்களுடன் பேசி உள்ளார். இந்திய விமானப் படை விமானங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், அவற்றை வெளியேற்றுவதற்கு சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் எல்லை நாடுகளுடன் உதவியுடன், சிறப்பு விமானம் மூலம் இந்தியர்களை மீட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக எல்லை நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. இதற்கிடையே, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் பயணச் செலவை மத்திய அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.