தான்சானியாவின் யூடியூப் பிரபலம் கிளி பாலுக்கு இந்திய தூதரகம் பாராட்டு

புதுடெல்லி: தான்சானியாவில் வசிக்கும் யூடியூப் பிரபலமான கிளி பாலுக்கு இந்திய தூதரகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

தான்சானியாவில் வசித்து வருபவர் கிளி பால். இவர் தனியாக யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்தியாவிலிருந்து வெளியாகும் படங்களில் இடம்பெறும் பிரபலமான பாடல்களுக்கு வாயசைத்து அதை யூடியூபில் பதிவேற்றி பிரபலமானவர் கிளி பால். மேலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் இவர் பிரபலமாக உள்ளார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 20 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். பாலிவுட் பிரபலங்கள் ஆயுஷ்மான் குரானா, குல் பனாக், ரிச்சா சத்தா உள்ளிட்டோர் இவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தான்சானியாவில் உள்ள இந்தியத் தூதகரம், கிளி பாலை நேற்று முன்தினம் நேரில் அழைத்து கவுரவித்துள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்திலும் இந்தியத் தூதரகம் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான இதயங்களை வென்ற `சிறப்பு பார்வையாளர்` கிளி பால் என்று ட்விட்டர் பக்கத்தில் இந்தியதத் தூரகம் கருத்து தெரிவித்துள்ளது.

யூடியூபில் பாடல்களைப் பதிவேற்றம் செய்யும்போது அந்த நாட்டின் பாரம்பரியமான உடைகளை அணிந்து பதிவேற்றி வருகிறார். லட்சக்கணக்கான இந்திய மக்களும், தான்சானியா மக்களும் இவரது வீடியோக்களை ரசித்து வருகின்றனர். பாரம்பரிய உடைகளை அணிந்து வீடியோக்களை பதிவேற்றம் செய்வதால் இவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.